லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : மக்கள் அச்சம்!

லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. கார்கில் பகுதியில் இன்று மாலை 3.48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. இதைத்தொடர்ந்து, லடாக்கின் கார்கில் பகுதியில் மாலை 4.01 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கங்களின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

You May Also Like

More From Author