ராகுல்காந்தி தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஆகாஷ்வாணி வானொலி அலுவலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராகுல்காந்தி நடத்திய போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் தினமும் நாடகம் போடுவதாக விமர்சித்துள்ளார்.
2014 முதல் நாடகத்தை அரங்கேற்றும் நிலையில் இன்னும் எத்தனை நாட்கள்தான் நாடகம் போடுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் அயராது பாடுபடும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்களிடம் ராகுல் பாடம் கற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடகம் போடுவதால் ஒன்றும் நடக்காது எனவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
