சீனாவின் 16வது ஆர்க்டிக் ஆராய்ச்சி பயணக் குழுவைச் சேர்ந்த சுயேலோங் மற்றும் சுயேலோங்-2 கப்பல்கள் செப்டம்பர் 30ஆம் நாள் மூன்று மாதப் பயணத்தை நிறைவு செய்து, ஷாங்காய் மாநகருக்கு திரும்பின.
இப்பயணத்தில், விரிவான ஆய்வு மற்றும் கண்காணிப்பு, அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, ஆராய்ச்சி அளவும், பணிகளின் மொத்த எண்ணிக்கையும் புதிய சாதனையைப் படைத்துள்ளன. மேலும், அறிவியல் கண்டுபிடிப்பு, தத்துவ முன்னேற்றம், தொழில்நுட்பச் சோதனை, உபகரணப் பயன்பாடு ஆகிய துறைகளில் பெறப்பட்ட சாதனைகள், உலகளாவிய காலநிலை மாற்றத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் பயனுள்ளதாக எதிர்கொள்வதற்கும், ஆர்க்டிக் பிரதேசத்தில் தொடரவல்ல வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் வலுவாக ஆதரவளித்துள்ளன.
