வங்கதேசத் தேர்தல் வெற்றிக்குப் பின் பிரதமர் மோடி தாரிக் ரஹ்மானுடன் தொலைபேசியில் பேச்சு  

Estimated read time 0 min read

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் அடுத்த பிரதமருமான தாரிக் ரஹ்மானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “வங்கதேச மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜனநாயக முறையிலான, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடையவும் தாரிக் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author