குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 4.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பாடல்
பின்னர், கொடிமரத்துக்குப் பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, “ஓம் காளி, ஜெய் காளி” என பக்தி முழக்கமிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
