வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

“அந்த இயந்திரங்கள் சிறியதாக இருந்தாலும், அவை மனிதர்கள் அல்லது AI ஆல் ஹேக் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்ட ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் என்பவரின் பதிவுக்கு பதிலளித்துள்ளார்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் புவேர்ட்டோ ரிக்கோவின் முதன்மைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author