உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 25ஆவது ஆண்டு நிறைவுக்கான உயர் நிலை உரையாடல்

உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 25ஆவது ஆண்டு நிறைவுக்கான உயர் நிலை உரையாடலை இவ்வமைப்புக்கான சீனாவின் பிரதிநிதிக் குழு நவம்பர் 25ஆம் நாள், ஜெனீவாவில் நடத்தியது.

சீனச் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியும் துணை வணிக அமைச்சருமான லீ சேங்காங் இந்நிகழ்வின் துவக்க விழாவில் உரைநிகழ்த்துகையில், சீனா இவ்வமைப்பில் சேர்ந்ததன் மூலம், உள்நாட்டுச் சீர்திருத்தத்தை ஆழமாக்கியுள்ளது என்றார். மேலும், குறிப்பிட்ட விதிமுறையை  மதிப்பதோடு, அதயனைப் பின்பற்றி செயல்படுவது பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்துடன் ஒருங்கிணைப்பதற்கான அடிப்படையாகும் என்பதைச் சீனாவின் நடைமுறை நிரூபித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் இவேலா அம்மையார் இதில் பேசுகையில், இவ்வமைப்பில் சேர்ந்த பிறகு பொருளாதார அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் நுட்ப புத்தாக்கம் முதலியவற்றில் சீனா பெற்றுள்ள சாதனைகளையும் உலகிற்கான சீனாவின் பங்களிப்பையும் வெகுவாக மதிப்பிட்டதோடு, பிற வளரும் நாடுகள் பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையில் சேர்வதற்குச் சீனா சிறந்த முன்மாதிரியை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author