சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், தேசிய எரியாற்றல் பணியகமும் அண்மையில் “நிலக்கரி தொழிற்துறை வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை” வெளியிட்டன.
இதில் 2030ஆம் ஆண்டுக்குள், நவீன நிலக்கரித் துறை அமைப்பு முறை அடிப்படையில் கட்டிமுடிக்கப்பட்ட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய இலக்குகள் அடிப்படையில் எட்டப்படும் என்பது இதில் முன்வைக்கப்பட்டன.
14ஆவது ஐந்தாண்டு காலத்தில், சீனாவின் நிலக்கரி வளர்ச்சி நிலை தொடர்ச்சியாக மேம்பட்டு, நிலக்கரி உற்பத்தி அளவு 485 கோடி டன்னை எட்டியுள்ளது.
15ஆவது ஐந்தாண்டு காலம், நிலக்கரி வளர்ச்சி மாற்றத்துக்கான முக்கிய காலமாகும். நிலக்கரி விநியோக உத்தரவாத தளக் கட்டுமானம், நிலக்கரி நுண்ணறிவுமயமாக்கல் கட்டுமானம் முதலிய 5 முக்கிய திட்டப்பணிகளுக்கான ஏற்பாடுகள் இத்திட்டத்தில் உறுதிப்படுத்த்தப்பட்டுள்ளன.
