புதிய தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பின் கட்டுமானச் செயல்திட்டத்தை, சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீன இணையவெளிப் பணியகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகியவை இணைந்து 26ஆம் நாள் வெளியிட்டன.
இத்திட்டத்தின்படி, 2030ஆம் ஆண்டிற்குள், விரிவான பரப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்ட புதிய தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பின் கட்டுமானத்தை நிறைவேற்றவும், பொருத்தமான நேரத்தில் 6ஜி வலையமைப்பின் கட்டுமானத்தைத் தொடங்கவும், தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள் இணைய அமைப்பை அடிப்படையில் நிறைவேற்றவும், தொழில்துறை இணையம், வாகனங்களின் இணையம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வலையமைப்புகளின் பெரிய அளவிலான வளர்ச்சியை நனவாக்கவும், அறிவார்ந்த வளர்ச்சியை பெருமளவில் அதிகரிக்கவும், தொழில்துறை சூழலமைப்பை மேம்படுத்தவும் வேண்டும்.
