4 சிறப்பம்சங்களில் சீன வெளிநாட்டு வர்த்தகம் கொண்டு வந்த புதிய வாய்ப்புகள்

Estimated read time 0 min read

இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தரவுகளைச் சீனா அக்டோபர் 14ஆம் நாள் வெளியிட்டது. சீனாவின் இந்தத் தரவுகள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி அழுத்தத்தைத் தாக்குப்பிடித்து வலிமையைப் பராமரித்ததாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேசச் செய்தி ஊடகங்கள் அடுத்தடுத்து மதிப்பீடு செய்தன.
இந்த வெளிநாட்டு வர்த்தக தரவு அறிக்கையில், சீன வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி வேகம் அதிகரிப்பு, வளர்ச்சிக்கான இயக்காற்றல் புதுமையாகி வருவது, வர்த்தகக் கட்டமைப்பு மேம்பட்டு வருவது, திறப்புக் கொள்கையின் தரம் மற்றும் பயன் உயர்ந்து வருவது ஆகிய 4 சிறப்பம்சங்கள் காணப்பட்டுள்ளன.
சீன வெளிநாட்டு வர்த்தகம் பெரிய முன்பதிவுகளுக்கு மட்டுமல்லாமல் சிறிய தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சீனத் தயாரிப்பு மூலம் உலகளாவிய நுகர்வோர்கள் செழிப்பான தேர்வுகளைப் பெற்றுள்ளனர். ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் பெரிய நாடான சீனா, பல்வேறு தரப்புகளுக்கும் நன்மைகளை வழங்குவதோடு, அவை செல்வமடையவும் உதவுகிறது. இவற்றின் மூலம், சீனாவுடன் இணைந்து சென்றால் அதிக வாய்ப்புகளைப் பெறும் என்பதை முழு உலகமும் தெளிவாகக் கண்டறிந்துள்ளது.

You May Also Like

More From Author