தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி….

Estimated read time 0 min read

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவாகும் இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய பகுதிகளை நோக்கி வரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author