சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் பிப்ரவரி 12ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி 2024ஆம் ஆண்டில் அறிவியல் புத்தாக்கம் மற்றும் தயாரிப்புத் துறையில் மேற்கொண்ட வரி மற்றும் கட்டணக் குறைப்பு மற்றும் வரியைத் திருப்பிக் கொடுத்தல் தொகை 2 இலட்சத்து 62ஆயிரத்து 930 கோடி யுவானாகும்.
வரிச் சலுகை உள்ளிட்ட கொள்கை மற்றும் ஆதரவில் 2024ஆம் ஆண்டில் தயாரிப்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் விற்பனை வருவாய் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை விட 2.2 சதவீத புள்ளிகள் உயர்ந்து காணப்படுகின்றது.
அவற்றில் சாதனங்களின் தயாரிப்புத் துறை, டிஜிட்டல் உற்பத்திப் பொருட்களின் தயாரிப்புத் துறை, உயர் தொழில் நுட்பத் தயாரிப்புத் துறை ஆகியவற்றின் விற்பனை வருமானம் 2023ஆம் ஆண்டை விட, முறையே 6.2 விழுக்காடு, 8.3 விழுக்காடு மற்றும் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதோடு சீனத் தயாரிப்புத்துறையானது உயர்நிலை மற்றும் நுண்ணறிவை நோக்கி சீராக முன்னேறி வருகிறது.