மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்..!!

Estimated read time 1 min read

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு விளக்கம் அளித்து, ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.

முன்னதாக நவம்பர் 25-ஆம் தேதி ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையையும் மன்னிப்பையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததோடு, நீதிமன்ற உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

நீதிமன்றத்தின் கடும் உத்தரவைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான குழுவினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) பாதுகாப்போடு நவம்பர் 28-ஆம் தேதி தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author