தொகுதி மறுவரையறை மசோதாவை ஸ்டாலின் ஆதரித்தது ஏன்?- ஈபிஎஸ் விளக்கம்

Estimated read time 0 min read

இது தமிழ்நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுதான். இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது என தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியுள்ளார்.

EPS

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் இப்போது இருக்கின்ற மக்கள்தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். இப்போது ஆதரவு கொடுக்கவில்லை என்றால், தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அப்படி பாதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் ஸ்டாலின் ஆதரவளித்ததாக கருதுகிறேன். திமுக வைத்த 2 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் தான் தொகுதி மறுவரையறை மசோதாவை அக்கட்சி ஏற்றுகொண்டது. இது தமிழ்நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுதான். இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author