140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாளன்று சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கியது. இவ்வாண்டு, இப்பொருட்காட்சி நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். இப்பொருட்காட்சியின் பரப்பளவு 15 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். 3 காலகட்டங்களாக நடத்தப்படும் இப்பொருட்காட்சி நவம்பர் 4ஆம் நாள் வரை நீடிக்கும். முன்னேறிய தயாரிப்பு எனும் தலைப்பிலான முதலாவது காலக்கட்டம் அக்டோபர் 15 முதல் 19ஆம் நாள் வரை நடைபெறும். இது, வெளிநாட்டு வர்த்தகத்தின் புதிய முன்னேற்றப் போக்கிற்கு இணங்க நடத்தப்பட்டுள்ளது. 32 ஆயிரம் நிறுவனங்கள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 64 விழுக்காட்டு நிறுவனங்கள் தொழில் துறை இணையம், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் ஈடுபடுகின்றன. இதில் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டும் உற்பத்திப் பொருட்கள், பசுமையான உற்பத்திப் பொருட்களின் விகிதம் முறையே 23.2 மற்றும் 26 விழுக்காடாக உயர்ந்து வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி துவக்கம்
You May Also Like
விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல்
October 1, 2024
சீன-கின்சாசா காங்கோ அரசுத் தலைவர்களின் சந்திப்பு
September 2, 2024
