“2051 வரை தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்ல!”.. திமுக ஐடி விங் போட்ட போஸ்ட்..!!! 

Estimated read time 1 min read

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், ‘FAIR DELIMITATION’ என்ற தங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இன்றி அதே உறுதியோடு இருப்பதாகத் திமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், தமிழ்நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதைத் திமுக இதன் மூலம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

முந்தைய சூழலில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 31 அல்லது 32 ஆகக் குறையும் அபாயமும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பங்கு 5.71% முதல் 5.89% வரை சுருங்கும் நிலையும் இருந்ததால் திமுக அதனை எதிர்த்தது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின் மூலம், தமிழ்நாட்டின் எம்பி இடங்கள் குறையாமல் 59 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளதோடு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பங்கு 7.23% வரை பாதுகாக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

மேலும், முன்பு 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரை மட்டுமே பாதுகாப்பு இருந்த நிலையில், தற்போதைய முடிவின்படி 2051-ஆம் ஆண்டு வரை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் தொகுதி எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கப்படும் எனத் திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இந்த முக்கிய அம்சங்களாலேயே தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவளிக்கும் முடிவில் உறுதியாக நிற்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author