தங்கம் விலை தொடர்ந்து குறைந்து நகை வாடிக்கையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது. தங்கமானது அமெரிக்க டாலரில் வர்த்தம் செய்யப்படுவதால், டாலர் மதிப்பை பொருத்து தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தற்போது சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு வலுப்பெற்று வருகிறது. அதனால் தங்கம் விலை குறைந்து வருகிறது. மேலும் ஏற்கனவே அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, வட்டி விகிதமானது இரண்டுக்கும் மேற்பட்ட முறை உயர்த்தப்படும் போது தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்பிருக்கிறது. தற்போது அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி உயர்த்தப்படும் பட்சத்தில் தங்கம் விலை இன்னும் சரியும்.
ஆபரணத் தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.13,515-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் அதே விலையில் தொடர்கிறது.
கடந்த 4 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,920 குறைந்திருந்தது. அதே போல், வெள்ளியும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
