7ஆவது சி.ஐ.சி.ஏ உச்சிமாநாட்டில் வாங்யீ பங்கெடுப்பு

சி.ஐ.சி.ஏ எனும் ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான அமைப்பின் 7ஆவது உச்சிமாநாடு 15ஆம் நாள், அசர்பைஜான்னின் பாக்கு நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் ஆசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கை, பயனுள்ள ஒத்துழைப்புகளின் விரிவாக்கம் முதலியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். சி.ஐ.சி.ஏவின் 7ஆவது உச்சிமாநாடு பற்றிய கூட்டு அறிக்கையும் இதில் வெளியிடப்பட்டது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். தன்னுடைய உரையில் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை விரைவுபடுத்துவது குறித்து 4 முன்மொழிவுகளை வழங்கினார். அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காத்தல், செழுமை மற்றும் மறுமலர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்துதல், நாகரிகத்தின் கூட்டுப் பகிர்வை மேம்படுத்துதல், உலகளவில் மேலாண்மையைக் கூட்டாக ஆழமாக்குதல் ஆகியவைகளே அந்த 4 முன்மொழிவுகளாகும்.

You May Also Like

More From Author