சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 27ஆம் நாள் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான தாலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

ஈரானின் மிக புதிய நிலைமையையும் அதற்கான பாகிஸ்தானின் கருத்தையும் தால் முதலில் அறிமுகப்படுத்தினார். பாகிஸ்தானின் இணக்க முயற்சிக்கு சீனா அளித்த ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சீனாவின் நிலைப்பாட்டை வாங் யீ மீண்டும் வலியுறுத்தினார். அப்போது வாங் யீ கூறுகையில்,

பிரதேச நிலைமை தணிவுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் ஆற்றிய பங்கிற்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது. பாகிஸ்தானுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, போர் நிறுத்தத்தையும் பிரதேச அமைதியையும் நனவாக்குவதற்கு பாடுபட சீனா விரும்புகின்றது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author