மத்திய கிழக்குப் பகுதி நிலைமை குறித்த சீனாவின் நிலைப்பாடு

ஐ.நா.விற்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசோங் 15ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையின் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கான பொது விவாதத்தில் கலந்து கொண்டு வேண்டுகோள் விடுக்கையில், மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமையை வெகுவிரைவில் தணிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போதைய மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை ஆழ்நிலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர்,  சூடான பிரச்சினைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு, தொடர்ச்சியான பாதிப்புகள், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பிராந்திய நாடுகள் நட்பார்ந்த அண்டை நாட்டுறவை வளர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும். கூட்டு, பன்நோக்கு, ஒத்துழைப்பு, தொடரவல்ல பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் ஊன்றி நின்று, மத்திய கிழக்குப் பகுதியின் பாதுகாப்புக்கான புதிய கோட்பாட்டை உருவாக்கி, அமைதியான எதிர்காலத்தைப் படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author