செங்கோட்டையன் உடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் நாளை இணைய உள்ளனர்.
காலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலையில் சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன், அவருடன் பல மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
நாளை காலை 10 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் தவெகவில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். செங்கோட்டையன் உடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் நாளை இணைய உள்ளனர்.
முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் இணைகின்றனர்.
