மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் வை.சி.எம் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யும் அறையிலேயே ஊழியர்கள் மற்றும் மருத்துவர் சிலர் சேர்ந்து மதுபார்ட்டி நடத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இறந்த உறவினரின் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக வந்த நபர் ஒருவரை, அங்கிருந்த ஊழியர்கள் இரவு முழுவதும் காக்க வைத்துள்ளனர். சான்றிதழ் தர ரொம்ப நேரமாகிறதே என சந்தேகமடைந்து அந்த நபர் பிரேத பரிசோதனை அறைக்குள் திடீரென சென்று பார்த்துள்ளார்.
அங்கே பிரேத பரிசோதனை செய்யும் டேபிளிலேயே மது பாட்டில்கள், நிரப்பப்பட்ட கிளாஸ்கள், பிரியாணி மற்றும் தொட்டுக் கொள்ள உணவுகளை வைத்துக்கொண்டு சிலர் ஜாலியாகக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
உறவினரை இழந்து துக்கத்தில் இருக்கும் மக்களை வெளியே அலையவிட்டுவிட்டு, பிணங்கள் வைக்கும் அறைக்குள்ளேயே மருத்துவ அதிகாரியும் ஊழியர்களும் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pune Crime : मृत्यू दाखला घ्यायला आलेला व्यक्ती रात्रभर वेटिंगला, आतमध्ये जाताच संतापजनक प्रकार, पुण्यातील हॉस्पिटलममधील PM रुममध्ये दारूपार्टी https://t.co/IIzwLga1lV
— Prashant Patil (@Prashant_P95) October 16, 2026
“>
இந்த வைரல் வீடியோ குறித்து வை.சி.எம் மருத்துவமனை நிர்வாகமும், பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியும் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
