எல்.கே. அத்வானி டெல்லி மருத்துவமனையில் அனுமதி..!

Estimated read time 0 min read

பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி
டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்:

பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 98 வயதாகும் அத்வானி டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை 8 மணியளவில் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மே மாதம் ஒரு முறை இதே போன்ற பிரச்சனைக்காக அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அக்டோபர் 7ஆம் தேதி அத்வானியை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். தற்போது அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பாஜகவினர் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author