காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

Estimated read time 0 min read

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் கருவறைக்கு செல்லும் வழியில், பாரம்பரியமாக ஆறு படிக்கட்டுகள் மட்டுமே இருந்தன. கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் இணைந்து, இந்த பாரம்பரிய படிக்கட்டுகளை, பத்து படிக்கட்டுகளாக மாற்றியமைத்தன. இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, படிக்கட்டுகளின் எண்ணிக்கை மீண்டும் ஆறாக மாற்றப்பட்டுள்ளன. இது இந்து முன்னணி நடத்திய தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என, அந்த அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author