டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து, தனது மகள் காவ்யா – இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார்.
சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா, இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு விழா, சென்னையில் வரும் நவம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது மகள் காவ்யா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி, விழாவிற்கு வருகை தருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது, கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி, மணமகன் அனிருத், அவரது பெற்றோர் ரவிச்சந்தர், லட்சுமி ரவிச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்
