சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடி தீர்வு காணவும், மழைநீரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.
சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியனர்.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடி தீர்வு காணவும், மழைநீரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட 8 பொறுப்பு அமைச்சர்கள் உடனே களத்துக்கு செல்லவும், மழைநீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
