மே மாதத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான உயர்வைக் கண்டு வருகிறது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டிய பின்னர், 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ₹74,000 ஐத் தாண்டிய பிறகு, விலைகள் சற்று குறைந்துவிட்டன.
இருப்பினும், இந்த போக்கு தலைகீழாக மாறி, தற்போது விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை (ஜூன் 5) நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹40 அதிகரித்து, தற்போது ₹9,130க்கு விற்பனையாகிறது.
மேலும், ஒரு சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹73,040 ஆக விற்பனையாகிறது.
ரூ.73,000ஐ கடந்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 5) விலை நிலவரம்
