“என்னை அதிமுகவில் இருந்து நீக்கியது நல்லதே; அந்த மகராசனுக்கு நன்றி” – செங்கோட்டையன்

Estimated read time 1 min read

மகராசன் எனக்கு நல்லது பண்ணியிருக்காரு.. அவர் நீக்கவில்ல என்றால் நான் மந்திரி ஆயிருக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மீட்பு பணியை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 படகுகள் தயார் நிலையில் உள்ளன. மீனவர்களும் மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் உள்ளனர். மழை முன்னெச்சரிக்கை பணிகளில் 1.40 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னெச்சரிக்கை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், தன்னார்வ அமைப்பினரும் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்ஜிஓக்கள், அலுவலர்கள், மக்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்குவதே இபிஎஸ்-க்கு வாடிக்கையாக மாறிவிட்டது. மகராசனாக எனக்கு நல்லது செய்துவிட்டார் எடப்பாடி. அவர் என்னை அதிமுகவில் இருந்து நீக்கவில்லை என்றால் நான் இன்றைக்கு அமைச்சராகி இருக்க முடியாது” என்றார்

Please follow and like us:

You May Also Like

More From Author