சீனப் பொருளாதாரத்துக்கான முதல் மூன்று காலாண்டுகள் அறிக்கை அக்டோபர் 19ஆம் நாள் வெளியிடப்பட்டது. இக்காலக்கட்டத்தில் சுமார் 107.11 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ள சீனாவின் ஜிடிபி, நிலையான விலையின்படி கணக்கிட்டால், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 4.6 சதவீதம் அதிகரித்தது. இது குறித்து பிரிட்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ் இணையதளம் நிபுணர் ஒருவரின் கருத்தை மேற்கோள்காட்டி, புதிய தர உற்பத்தி சக்திகள் குறிப்பாக முன்னேறிய தயாரிப்புத் தொழில், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் முக்கியமான பங்காற்றி வருகிறது என்று தகவல் வெளியிட்டது.
இந்த சாதனை அறிக்கையை நுணுக்கமாக ஆய்வு செய்தால், நிலையான செயல்பாடு, புதிய இயக்காற்றல், மேம்பட்ட கட்டமைப்பு, சிறந்த செயல்திறன் ஆகிய 4 சிறப்பம்சங்கள் சீனப் பொருளாதார வளர்ச்சியில் காணப்படலாம். முதல் மூன்று காலாண்டுகளில் எட்டப்பட்ட 4.6 விழுக்காடான வளர்ச்சி விகிதம், முழு ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு மீதான எதிர்பார்ப்புக்குப் பொருந்தியதோடு, உலகின் முக்கிய பொருளாதாரங்களில் முன்னணியில் உள்ளது.
மேலும், சீரான வளர்ச்சிப் போக்கைக் காட்டியுள்ள பல பொருளாதாரக் குறியீடுகள், சீனப் பொருளாதாரத்தின் உயிராற்றல் மற்றும் மீள்தன்மையை வெளிக்காட்டியதோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து முக்கிய இயக்காற்றலின் மூலமாகும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
