ஜப்பான் பிரதமர் தகைச்சி சனே அக்டோபர் 17 மற்றும் 19ஆம் நாள், யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்தினார். அவர் மட்டுமின்றி, ஜப்பானின் அமைச்சரவையின் அதிகாரிகள் பலரும், லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் உயர்நிலை அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். போர் குற்றப்பொறுப்பைத் தட்டிக்கழித்து, போர் மீதான தீர்ப்பைத் திரித்துப் புரட்டி, மறு இராணுவமயமாக்கத்துக்கு ஆயத்தம் செய்வதன் நோக்கம் இதில் வெளிக்காட்டப்பட்டது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, ஜப்பான் அரசு வரலாற்றை சரியாகப் பார்க்க வேண்டும் என்றும் தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானின் வலது சாரி சக்திகள், ஆக்கிரமிப்பு வரலாற்றை உள்நோக்கத்துடன் திரித்துப்புரட்டிய செயல், மறு இராணுவமயமாக்க இலக்குடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பாதையில் ஜப்பான் தொடர்ந்து தீவிரமாக நடைபோட்டு வருகிறது. இதற்கு ஜப்பானிலும் உலகளவிலும் கவலை மற்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஜப்பானின் பல இடங்களில் தகைச்சி சனே அரசின் நடத்தை குறித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடைபெற்றன. ஜப்பான் வலது சாரிகளின் செயல்பாடுகளுக்கு, சீனா உள்ளிட்ட போரில் பாதிக்கப்பட்ட நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்க்காது.
