ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் குழுக் கூட்டம்

சீன தலைமையமைச்சர் லீச்சியாங் 20ஆம் நாள் துஷான்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டாகும். முக்கிய மனிதகுலத்தின் எதிர்காலத்துடன் தொடர்பான காலக்கட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வரலாற்றுப் பொறுப்பை ஏற்றி, வரலாற்றுத் திசையை வழிக்காட்ட வேண்டும் என்று பிஷ்கெக் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். இவ்வமைப்பு மேலதிக சர்வதேச கூட்டாளிகளை ஒன்றுகூடி, பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். கருத்து வேற்றுமைகளில் பொது நலன்களைத் தேடி, உலக அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும். பாடுபட்டு வித்தியாசத்தில் அமைதியாகவும் ஒத்துழைப்பாகவும் கூட்டு வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author