பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படத்தின் சிறப்பு நீட்டிக்கப்பட்ட பதிப்பு (Extended Version) ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது.
ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த பிரம்மாண்ட ஸ்பை த்ரில்லர் திரைப்படம், தியேட்டர்களில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2025 டிசம்பர் 5 அன்று தியேட்டர்களில் வெளியாகி, பின்னர் ஜனவரியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
தற்போது ‘Dhurandhar Raw And Undekha’ என்ற பெயரிலான இதன் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்,மே 22 நெட்ஃபிக்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஆகிய தளங்களில் வெளியாகிறது.
இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
நாளை ஓடிடிக்கு வரும் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் பாகத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்
