சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகளை தயார் நிலையில் வைக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் யே குங் அறிவுறுத்தியுள்ளார்.