உயிரினப் பல்வகைமைக்கான பாதுகாப்புக் கொள்கைகளின் நடைமுறையாக்கத்தை விரிவாக்கச் சீனா வேண்டுகோள்

Estimated read time 1 min read

ஐ.நா உயிரினப் பல்வகைமை ஒப்பந்தத் தரப்புகளின் 17ஆவது மாநாட்டின்(COP17)சீன அரங்கு 19ஆம் நாள் ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவானில் திறக்கப்பட்டது. உலகின் உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும், தொடர்புடைய கொள்கை மற்றும் நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தைப் பல்வேறு தரப்புகள் விரிவாக்க வேண்டும் என்றும் சீன உயிரினச் சுற்றுச்சூழல்  அமைச்சர் ஹூவாங் ரென்ஜியூ துவக்க விழாவில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

உயிரினப் பல்வகைமை ஒப்பந்தத்துக்கான செயலகத்தின் நிர்வாகச் செயலாளர் ஆஸ்ட்ரிட் ஷோமேக்கர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, சீன உயிரின பாதுகாப்புக்கான சிவப்புக் கோடு எனும் அமைப்பு முறை குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author