சீன நிறுவனங்களை அவதூறு கூறி, அவற்றின் மீது தடைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் செயல், இந்நிறுவனங்களின் சட்டபூர்வ உரிமைகளையும் நலன்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும், இது குறித்து சீனா உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும், சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 20ஆம் நாள் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா தனது தவறான செயல்களை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் அதற்கு அவசியமான பதிலடி நடவடிக்கைகளைச் சீனா எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
