தங்கம் விலை சரிவு! இத்தனை ரூபாய் குறைந்துள்ளதா?

Estimated read time 1 min read

தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சற்று கூடியது. இருப்பினும் மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை இன்னும் சில நாட்களுக்கு சரிவை நோக்கி தான் செல்லும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த விலை குறைவு நிரந்தரமானது அல்ல என்றும் கூறுகின்றனர்.

தங்கத்தின் மீது நீண்டகால முதலீடு செய்வோர் சற்று யோசிக்க வேண்டி இருந்தாலும், குறைந்த அளவில் நகை வாங்க நினைப்போருக்கு இது உகந்த நேரமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், போர் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் விலை குறைந்து, டாலர் மதிப்பு வலுப்பெறும் பட்சத்தில் தங்கம் விலை விறுவிறுவென உயரும் என்றும், ஒரு சவரன் விலை ரூ. 2 லட்சம் வரை கூட உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 21) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.230-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று விஜயதசமி தினத்தில் தங்கத்தின் விலை சரிந்த சூழலில், இன்று மீண்டும் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author