சீன நிறுவனங்களிலிருந்து கொள்முதல் தடை செய்வது குறித்த அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு

கூட்டாட்சி கொள்முதல் செயல்முறையிலிருந்து சீன நிறுவனங்களை நீக்குவது மற்றும் தடை செய்வது தொடர்பான அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு குறித்து, சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீன அரசு, இணைய பாதுகாப்பு மற்றும் தரவுத் தனியுரிமையை சட்டத்திற்கு இணங்க பாதுகாக்கும் வகையில், பல சட்டங்களையும் விதிகளையும் வெளியிட்டுள்ளது என்றார். அமெரிக்கா தேசிய பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தி தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, சீன நிறுவனங்களின் சட்டபூர்வ உரிமைகளையும் நலன்களையும் பாதித்துள்ளதுடன், நியாயமான போட்டித்தன்மையுடைய சந்தைச் சூழ்நிலையைச் சீர்குலைத்துள்ளது. அமெரிக்கா உண்மைகளையும் சந்தை விதிகளையும் மதிக்கவும், தனது தவறான செயல்களை உடனடியாகச் சரிசெய்யவும் வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது. தனது சொந்த சட்டபூர்வ உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பேணிக்காக்கும் நடவடிக்கைகளையும் சீனா எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author