ரஷிய தலைமையமைச்சர் மிஷுஸ்டினின் அழைப்பின் பேரில், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 20ஆம் நாளிரவு, சிறப்பு விமானம் மூலம், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் புல்கோவோ விமான நிலையம் சென்றடைந்தார். சீன-ரஷிய தலைமை அமைச்சர்கள் இடையிலான 31வது குறிப்பிட்டக்கால சந்திப்பில் கூட்டத்தில் அவர் பங்கெடுக்க உள்ளார்.
லீச்சியாங் கூறுகையில், இவ்வாண்டில், இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2 முறை சந்தித்துரையாடியுள்ளனர். இரு தரப்புறவின் வளர்ச்சிக்குப் புதிய மாபெரும் இலக்குகளை வகுத்துள்ளனர். ரஷியாவுடன் இணைந்து பாடுபட்டு, இரு நாடுகளின் மக்களுக்குப் பயனளித்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உறுதி மற்றும் நிலைத் தன்மையைக் கொண்டு வர சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
