மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் சதய விழா இரண்டு நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஓதுவார்களின் திருமுறைப் பாடல்கள், செண்டை மேளம், கொம்பு வாத்தியங்கள் முழங்க சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, யானை மீது திருமுறைகள் எடுத்துச் செல்லப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
