கன்னியாகுமரி பாறசாலை அருகே கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில், விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரள மாநிலம் பாறசாலை ரயில் நிலையம் அருகே, அதிகாலை தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால், பிலாஸ்பூரில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற விரைவு ரயில் தடம் புரண்டது.
இரவு பெய்த கனமழையே மண் சரிவுக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பினர்.
விபத்தால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும், இருமார்க்கமாக இயக்கப்படும் ரயில்களும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
