ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 குறைவு…இன்றைய புதிய விலை நிலவரம்!

Estimated read time 0 min read

சென்னை : சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் வரை கணிசமாகக் குறைந்துள்ளது. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டு, பின்னர் அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 800 ரூபாயும் குறைந்திருந்த நிலையில், இன்றும் அதன் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்றைய புதிய விலை நிலவரத்தின்படி, பொதுமக்களால் அதிகம் வாங்கப்படும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 155 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,05,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 10,835 ரூபாயாகவும், சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 86,680 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் வரை குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ துகள்கள் மற்றும் கட்டிகளின் விலை 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தீபாவளி மற்றும் திருமணப் பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த அளவுக்குக் குறைந்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author