பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிரான்சில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளன. சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிரான்ஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக உள்ளூர் அறிவிப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு பாரிஸில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
