அடுத்த சில மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்

இன்று காலை சென்னை மக்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மித மழை பெய்தது.
கடந்த சில மாதங்களாகவே வெயில் பாடாய்படுத்தி வந்த நேரத்தில், இந்த மழை சென்னைவாசிகளுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author