சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில் நாளை முதல் இயக்கம்..!

Estimated read time 1 min read

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்.23- ஆம் தேதி முதல் வரும் டிச.24- ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகின்றன. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களைத் தவிர்த்து ஐந்து நாட்களுக்கு ஏசி மின்சார புறநகர் ரயில் சேவை வழங்கப்படவுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படும். ஆவடி- அரக்கோணம் (49051), சென்னை சென்ட்ரல்- ஆவடி (49053), சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் (49055), அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் (49052), ஆவடி- சென்னை சென்ட்ரல் (49054), அரக்கோணம்- ஆவடி (49056) ஆகிய ஆறு ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிநவீன வசதிகளுடன் 12 பெட்டிகளுடன் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்- அரக்கோணம் ஏசி மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் கேரியேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் போன்ற ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025- ஆம் ஆண்டு ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் முதல் ஏசி மின்சார புறநகர் ரயில் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியது. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அக்.23- ஆம் தேதி இரண்டாவது ஏசி புறநகர் மின்சார ரயில் சேவைத் தொடங்கவுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author