தென் தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை – 4 மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு….!! 

Estimated read time 0 min read

தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக நேற்றிரவு முதலே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 22) ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்து எச்சரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் அவசர விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்தார். அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை நீடித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் பிரதாப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்திலும் மழைப்பொழிவு அதிகரித்து காணப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாலும், தென் மாவட்டங்களில் மழை மேலும் வலுக்கக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author