வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர். 370 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ள பாதிப்பால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் 53 டன் நிவாரணப் பொருட்களையும், 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், ‘ஆப்ரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கைமூலம் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அப்போது, நிவாரணப் பொருட்களையும், மீட்பு படையினரையும் அனுப்பி உதவிய பிரதமர் மோடிக்கு இலங்கை மக்களின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே தெரிவித்தார்.
