இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானது..!

Estimated read time 0 min read

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

You May Also Like

More From Author