தீபாவளிக்கு OTTயில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்  

வரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.
பொதுவாக இது போன்ற விழாக்களின் போது திரைப்படங்களை வெளியிடுவது எழுதப்படாத விதி.
அந்த வகையில் இந்த ஆண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.
முதலில் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களை பற்றி பார்க்கலாம்.
தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது ‘தங்கலான்’ திரைப்படம். இதில், சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். படம் வசூல்ரீதியாக பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எனினும், இப்படம் தற்போது வரை ஓடிடியில் வெளியாகவில்லை. இப்போது, இது இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. ஆனால், தீபாவளியை முன்னிட்டு ‘தங்கலான்’ ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author