தங்கம் விலை கடந்த தொடர்ந்து குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும், ஒருசில மாதங்களுக்கு தங்கம் விலை இறங்குமுகத்தில் தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் உலகளாவிய போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்கு மேலேயே இருந்து வருவதால் அது தங்கம் விலையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அடுத்த 10, 11 மாதங்களுக்கு தங்கம் விலை ஏறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதால், நகை வாங்க நினைப்போரும், நகை சீட்டு போட நினைப்போருக்கும் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையாகிறது.
நேற்று ஒரு சவரன் ரூ.1,04,560க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.13,085க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.220க்கும் ஒரு கிலோ ரூ.2,20,000க்கும் விற்கப்படுகிறது.
