சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

Estimated read time 0 min read

சென்னை திருவான்மியூரில், திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், வாக்களிக்காதவர்கள் மட்டுமின்றி, வாக்களித்தவர்களும் இந்த ஆட்சியில் வேதனைப்படும் நிலை உள்ளதாகக் கூறினார். மேலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

இவ்விழாவில் பேசிய முன்னாள் பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தவெக ஆட்சியை கடுமையாக அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author